ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு பெற விண்ணப்பித்த 75 வீதமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் 75 வீதமானவர்கள் தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும், சில ஆவணங்கள் முறைசாரா முறையில் புதுப்பிக்கப்பட்டதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அதனால் அவர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிலர் பிறப்புச் சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை புகைப்படங்களை இணையத்தள விண்ணப்பங்களில் பயன்படுத்தியிருப்பதாலும், சிலர் வேறு சிலரது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களுடன் விண்ணப்பித்ததாலும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை அச்சிட முடியாமல் போனதாக அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய 51 பிரதேச செயலக அலுவலகங்களில் கைரேகைகளை பதிவு செய்யும் நடவடிக்கையை இணையவழியில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அதன்படி மூன்று நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.