Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகளுக்கான செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் ஆரம்பம்

பாடசாலைகளுக்கான செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles