மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் நேற்றிரவு (18) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலைப் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நடராசா சிவசுப்ரமணியம் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு நேர உணவை உட்கொண்ட பின்னர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துறங்கியவேளை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த கடுகதி ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவரது தலையில் பலத்த காயம் காணப்படுவதுடன். திடீர் மரண விசாரணையதிகாரி சம்பவ இடத்திற்குச்சென்று பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
அதையடுத்து சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.
ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.