Friday, May 9, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாதிரி செவ்வாய்க்கு பயணிக்கவுள்ள இலங்கை பெண்

மாதிரி செவ்வாய்க்கு பயணிக்கவுள்ள இலங்கை பெண்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் இயக்கப்பட்ட குழுவின் முதற்கட்ட பயிற்சிக்கு இலங்கையைச் சேர்ந்த பியூமி விஜேசேகர என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில், அமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்திற்கான உருவகத்துக்குள் செல்வதற்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த உருவகத்துக்குள் வாழ்தல் மற்றும் பணிகளில் பங்கேற்க, ஒரு இலங்கையர் உட்பட நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட புதிய குழுவை நாசா தேர்ந்தெடுத்துள்ளது.

இதன்படி ஜேசன் லீ, ஸ்டெபானி நவரோ, ஷரீஃப் அல் ரொமைதி மற்றும் இலங்கையரான பியூமி விஜேசேகர ஆகியோர் மே 10 ஆம் திகதி நாசாவின் மனித ஆய்வு ஆராய்ச்சி அமைப்பில் நுழைவார்கள்.

உள்ளே நுழைந்தவுடன் இந்தக் குழுவினர், 45 நாட்கள் விண்வெளி வீரர்களைப் போல வாழ்ந்து, பணிகளில் ஈடுபட்ட பின்னர், ஜூன் 24 அன்று பூமிக்கு ‘திரும்பிய’ வகையில் குறித்த உருவகத்தை விட்டு வெளியேறுவார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles