4 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை ஒருவர் எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொடங்கொட புஹபுகொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சூதாட்ட மைதானத்தில் வைத்து இந்தப் பணத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறி நாணயத்தாள்களை ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
போலி நாணயத்தாள்களை பொலிஸாரிடம் ஒப்படைத்த நபர் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் சந்தேகநபர்களை பொலிஸார் அடையாளம் கண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.