Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவியை கொலை செய்த கணவன் கைது

மனைவியை கொலை செய்த கணவன் கைது

கந்தேநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுனுகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (16) இரவு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹுனுகல, அல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான கணவர் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பெண்ணின் சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தேநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles