Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கி - தோட்டாக்களுடன் ஒருவர் கைது

துப்பாக்கி – தோட்டாக்களுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் 51 கிராம் ஹெரோயினுடன் குற்ற கும்பலைச் சேர்ந்த ‘கெஹெல்பெத்தர பத்மே’ என்பவரின் சீடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட விசேட பாதாள உலக குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (16) நீர்கொழும்பு பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் (44) தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள அவிஷ்க மதுசங்க என்ற ‘கிரி கொல்லா’வின் உதவியாளராகவும் கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவருடன் தங்கியிருந்த நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles