Tuesday, March 18, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை - பாகிஸ்தானுக்கு இடையிலான கலாசார உறவுகளை மேம்படுத்த திட்டம்

இலங்கை – பாகிஸ்தானுக்கு இடையிலான கலாசார உறவுகளை மேம்படுத்த திட்டம்

பாகிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம ஆணையாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹிம் உல் அஸீஸ் மற்றும் பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று(16) பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையில் நடந்து வரும் கலாசார தொடர்புகள் மற்றும் தற்போதைய கலாச்சார ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, இரு நாடுகளுக்கு இடையே கலாசார சுற்றுலா மற்றும் வசதிகளை மேம்படுத்துதல், தொல்லியல் அறிவு பரிமாற்றம் தொடர்பான கருத்தரங்குகளை நடத்துதல், இரு நாடுகளிடையே தொல்லியல் ஆய்வுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல், கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினங்களை இலங்கையில் காட்சிப்படுத்துதல் மற்றும் பாகிஸ்தானிலுள்ள இலங்கை பாகிஸ்தான் கலாச்சார மையம் போன்றவை இங்கு விவாதிக்கப்பட்டன.

பாகிஸ்தான் பொது ஆணையர் அலுவலகத்தின் துணைப் பொது ஆணையர் வாஜித் ஹசன் ஹஷ்மியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles