நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மார்ச் மாதத்தில் எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, இந்த நாட்டில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் மாதாந்த அறிக்கைகளையும் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தை மேற்கோள் காட்டி, இந்த நாட்டில் எரிபொருளின் விலை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.