Monday, January 19, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் பலி

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் பலி

கம்பளை – அம்பகமுவ வீதியிலுள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு ஜாவத்த பிரதேசத்தை சேரந்த 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

விளையாடிக்கொண்டிருந்த போது, குறித்த சிறுவன் கிணற்றில் வீழ்ந்துள்ளார்.

பின்னர், காணாமல் போன சிறுவனைத் தேடிய போது, அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவனை உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles