கடலில் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தர்கா நகரை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலம் இன்று (16) முரகல்ல கடற்கரையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவன் நேற்று (15) பிற்பகல் தனது தாய், இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஐந்து நண்பர்களுடன் பெந்தோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரைக்கு சென்று நீரில் உல்லாசமாக இருந்ததாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்போதே குறித்த சிறுவன் இந்த துரதிஷ்டவசமான சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.