அமெரிக்க நிறுவனமான பார்க் ஏர் நிறுவனம் எதிர்வரும் 23ம் திகதி முதல் நாய்களுக்கு மட்டுமேயான புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, நாய்களும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் இந்த விமானத்தில் பறக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
நியூயோர்க்கில் இருந்து புறப்படும் முதல் விமானங்களுக்கு, பார்க் ஏர் இணையதளம் மூலம் இருக்கை முன்பதிவு செய்யும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
எனவே, ஒரு நாய் மற்றும் ஒரு மனிதனுக்கான டிக்கெட்டுக்காக சுமார் 6,000 டொலர்கள் அறிவிடப்படுகிறது.