இந்த மாதத்தின் முதல் 9 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50,537 ஆகும்.
அவர்கள் இந்தியா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த வருடத்தில் 6 இலட்சத்து 86 ஆயிரத்து 321 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.