Saturday, July 27, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமூட நம்பிக்கையால் பறிபோன ஆசிரியையின் உயிர்

மூட நம்பிக்கையால் பறிபோன ஆசிரியையின் உயிர்

பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த, அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான கோவிந்தசாமி கல்பனா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என குடும்பத்தினர் நம்பியுள்ளனர்.

அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது, அவருக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்ட மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் குறித்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன்!

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாகவும், தேவைப்பட்டால் உதவி செய்வதாகவும் உறுதியளித்ததாகவும்...

Keep exploring...

Related Articles