திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமேத்ராகம பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட பொலிஸ் அதிரடிப்படைப் பிரிவுடன் இணைந்து தலைமையக பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
36 வயதுடைய குறித்த நபரிடமிருந்து 3 கிராம் 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்தோடு, ஹெரோயின் போதைப்பொருள் 84 பக்கற்றுகளாக பொதி செய்யப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர் ஒரு போதைப் பொருள் வியாபாரி எனவும் அவர் மீது நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.