அவிசாவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த யுவதி நேற்று (10) மாலை நபர் ஒருவருடன் சம்பந்தப்பட்ட விடுதியில் அறையொன்றை முன்பதிவு செய்துள்ளார்.
எனினும், அவர்கள் அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில், குறித்த நபர் யுவதி சுயநினைவின்றி இருப்பதாக விடுதி நிர்வாகத்துக்குத் தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து ஓட்டல் நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.