Monday, June 22, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாவகச்சேரியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மன்னாரில் மீட்பு

சாவகச்சேரியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மன்னாரில் மீட்பு

சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது.

சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறச்சென்ற ஒருவர் தனது மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். பின்னர் திரும்பிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸார் பொலிஸ் நிலையங்களுக்கும் சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் வழங்கினர்.

இதையடுத்து மன்னார் சோதனைச்சாவடியில் வைத்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளைத் திருடியவரும் கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles