Monday, May 12, 2025
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுற்றச் செயலுக்கு தயாரான மூவர் சிக்கினர்

குற்றச் செயலுக்கு தயாரான மூவர் சிக்கினர்

கொலை செய்யும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 துப்பாக்கி, 14 தோட்டாக்கள் அடங்கிய மகசீன், வாள் மற்றும் கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து நேற்று (10) மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொகெட்லேன் பகுதியில் உள்ள ஸ்ரீ போதிராஜாராமய விகாரைக்கு பின்புறம் உள்ள வீடொன்றுக்கு அருகில் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது வீட்டின் கூரையில் சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைதான மூவரும் 18, 34 மற்றும் 47 வயதுடைய மருதானை,கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles