Tuesday, April 22, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியா செல்கிறார் இலோன் மஸ்க்

இந்தியா செல்கிறார் இலோன் மஸ்க்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இலோன் மஸ்க் இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளார்.

அவர் இதனை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எனினும் அவர் இந்தியாவுக்கு பயணிக்கும் நாள் குறித்து எந்த தகவலும் குறிப்பிட்டிருக்கவில்லை.

டெஸ்லா தொழிற்சாலையை நிறுவுவதில் முதலீடு செய்வது தொடர்பான உடன்பாட்டை எட்டுவதே அவரது இந்த விஜயத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.

கடந்த வாரம் இந்தியா மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை கணிசமாக குறைத்தது.

டெஸ்லாவின் தலைவரான மஸ்க்இ 2021 ஆம் ஆண்டில் தனது நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் வெளியிடுவது அதிக இறக்குமதி வரிகளால் தடைபட்டதாகக் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles