Friday, June 20, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

மாத்தறை – கனங்கே – தொலேலியத்த பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (11) அதிகாலை 4.30 மணியளவில் கனங்கே ரஜமஹா விகாரைக்கு அருகில் மாடுகளை லொறியில் ஏற்றிச் செல்வதை அவதானித்த இரவு நேர கண்காணிப்பு பொலிஸ் குழுவொன்று, லொறியை தொலேலியத்த பிரதேசத்தில் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், லொறி அதனை மீறி தொடர்ந்து பயணித்ததால், பொலிஸார் வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இதில் லொறியில் இருந்த ஒருவர் படுகாயம் அடைந்ததுடன் மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.

கிங்தோட்டை, மாபுகல பகுதியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

சந்தேகநபர் தற்போது சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles