இலத்திரனியல் கடவுச்சீட்டு (E-Passport) வழங்குவதில் 4 ஆண்டுகளாகத் தாமதம் ஏற்படுவது குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
2020ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கொள்முதல் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய, அந்தப் பணிகளை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குழு பணிப்புரை வழங்கியது.
விமான நிலையக் கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு இரவு நேரங்களில் போதிய எண்ணிக்கையிலான அதிகாரிகள் இல்லாதது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, நெரிசலான நேரங்களில் வினைத்திறனான வகையில் அதிகமான அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறும், அதனை ஏப்ரல் 15ம் திகதிக்கு முன்னர் குழுவில் சமர்பிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.