ஹிந்தோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்வெவ பகுதியில் உள்ள ஏரியில் இனந்தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான விசாரணையில் உயிரிழந்தவர் தங்கஹகடவல, ஹிந்தோகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சடலத்தின் பிரேதப் பரிசோதனையில் அவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணையில், சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் 24 வயது மகனும், 39 வயதுடைய மனைவியும் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக வீட்டில் வைத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணகைளில் தெரியவந்துள்ளதுடன், கொலையின் பின்னர் சடலத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஹிந்தோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.