எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பண்டிகைக்காலத்தில் எவ்வித இடையூறுமின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அவசியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.