Tuesday, April 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதடைசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களுடன் மூவர் கைது

தடைசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களுடன் மூவர் கைது

நாட்டில் தடைசெய்யப்பட்ட 1000 CC மோட்டார் சைக்கிளின் பாகங்களை ஏற்றிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் எனவும் பூகொட பொலிஸ் நிலையத்தில் விசேட கடமைகளுக்காக நியமிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முல்லேரியாவில் நேற்று (9) விசேட கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகத்திற்கிடமான காரை சோதனையிட்ட போது மேற்படி மோட்டார் சைக்கிளின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது காரில் சந்தேகநபர்கள் மூவர் பயணித்துள்ளதுடன் சந்தேக நபர்களில் ஒருவர் மேற்கண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles