தனது காதலி இறந்து 50 நாட்கள் கடந்த நிலையில் நேற்று (09) இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெல்லிப்பளை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் காதலி 50 நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டதாகவும், காதல் உறவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த யுவதி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், காதலி இறந்து 50 நாட்களுக்கு பின்னர் காதலன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.