Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதில் மீனவர்கள் காயமடைந்ததால் மீன்பிடிக்காமல் நஷ்டத்துடன் கரை திரும்பியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்

மீனவர்கள் கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து படியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தால் கைது செய்வோம் என ஒலி பெருக்கி மூலமாக எச்சரித்ததுடன் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீன்பிடி விசைப்படகுகளை விரட்டியடித்து மீன்பிடி வலைகளே அறுத்து சேதப்படுத்தியதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடைத்து இரவு 11 மணியளவில் பத்திற்கு மேற்பட்ட விசைப்படகுகளில் ஏறிய இலங்கை கடற்படை மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் முத்துக்குமார், தங்கம், மெக்கானஸ் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்து மீன் பிடிக்காமல் நேற்று இரவு நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

மேலும் இலங்கை கடற்படையின் பெரிய ரோந்து கப்பல்களால் மீன்பிடி படகு மீது மோதியது இரண்டுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளது.

இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த மீனவர்கள் சிலர் மருத்துவமனையில் முதலுதவி உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் மீன வளத்துறை உதவி இயக்குனர் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்கியதில் பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்த சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles