Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு6 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

6 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பக் பௌர்ணமி தினமான ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுபானசாலைகளை மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே 22, 23, 24 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles