Saturday, August 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் பயணங்களுக்கு ஈ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

ரயில் பயணங்களுக்கு ஈ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

இந்த ஆண்டுக்குள் ரயில் பயணங்களுக்கு ஈ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

19 மில்லியன் டொலர் செலவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில காலமாக நடைமுறைப்படுத்தப்படாத இத்திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, இந்த திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக, அடுத்த 5 மாதங்களுக்குள் ரயில் டிக்கெட்டுகளுக்கு QR குறியீடு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles