தெற்கு தாய்லாந்தின் சூரத் தானி கடற்கரைக்கு அருகில் பயணிகள் கப்பல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது கப்பலில் சுமார் 100 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சூரத் தானியில் இருந்து பிரபலமான சுற்றுலாத் தீவான கோ தாவோவுக்கு கப்பல் சென்று கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டது.
படகில் இருந்த பயணிகள் சிலர் தீயில் இருந்து தப்பிக்க கடலில் குதித்ததாகவும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.