Friday, March 14, 2025
27.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாய் புற்றுநோயால் நாளாந்தம் 3 பேர் உயிரிழப்பு

வாய் புற்றுநோயால் நாளாந்தம் 3 பேர் உயிரிழப்பு

வாய் புற்றுநோயினால் நாட்டில் தினமும் 3 பேர் உயிரிழப்பதாகவும் நாளாந்தம் சுமார் 6 பேர் வாய் புற்றுநோயாளிகளாக கண்டறியப்படுவதாகவும் மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வைத்தியர் நிலந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையில் 5 வயதுடைய குழந்தைகளில் 63 வீதமானோர் பற்கள் சிதைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பாலான குழந்தைகள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்குவதில்லை என பாடசாலை சுகாதார ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் நிலந்த ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles