Sunday, March 15, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொறி - முச்சக்கர வண்டி விபத்து: இருவர் படுகாயம்

லொறி – முச்சக்கர வண்டி விபத்து: இருவர் படுகாயம்

ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்து ஓயா பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் குருந்து ஓயாவில் இருந்து இராகலை நோக்கி பயணித்த லொறி, எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும், லொறியில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹைபொரஸ்ட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles