Tuesday, November 25, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற கார்

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற கார்

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றது.

வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், காரின் சாரதி வாகனத்தை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த மோட்டர் சைக்கிள் பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டதுடன், தப்பிச் சென்ற காரினை அப் பகுதியில் நின்றவர்கள் எடுத்த புகைப்படடம் மற்றும் சிசீரீவி கணொளி உதவியுடன் வவுனியா பொலிஸார் தேடி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles