கிளிநொச்சி, பிரமந்தனாறு பிரதேசத்தில் நேற்று மாலை ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரமந்தனாறு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற வருடாந்த நிகழ்வு ஒன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்ட இரு குழுக்களையும் சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்ததாகவும், பின்னர் சம்பந்தப்பட்ட இரு குழுக்களும் வேறொரு இடத்தில் மீண்டும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 32 வயதுடைய நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.