Friday, March 14, 2025
27.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே மாதத்தில்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே மாதத்தில்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே மாத தொடக்கத்தில் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மே மாதத்தின் மத்தியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கான அட்டவணைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், விடைத்தாள் திருத்தும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் நபர்கள் சுமார் 35,000 பேர் இருப்பதாகவும், க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நபர்கள் சுமார் 19,000 பேர் இருப்பதாகவும், இவர்கள் அனைவருக்கும் திருப்திகரமான கொடுப்பனவு கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles