Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்காஸாவில் உணவுப் பொருட்களை கொண்டு சென்ற வாகனம் மீது தாக்குதல்

காஸாவில் உணவுப் பொருட்களை கொண்டு சென்ற வாகனம் மீது தாக்குதல்

காஸா மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற தொண்டு நிறுவன வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, போலந்து, பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களும், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.

தொண்டு நிறுவனம் சேகரித்த உணவுப் பொருட்களுடன் காஸாவை நோக்கி சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பல்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு எத்தகைய குழப்பமும் காரணமில்லை எனவும் தமது ஒவ்வொரு நகர்வு குறித்தும் இஸ்ரேல் இராணுவத்திடம் அறிவித்திருந்த போதும் தமது வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் WCK தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தவறுதலாக இடம்பெற்ற தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles