Wednesday, February 4, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலி பொலிஸ் நிலையத்திலிருந்த இரு கைதிகள் தப்பியோட்டம்

காலி பொலிஸ் நிலையத்திலிருந்த இரு கைதிகள் தப்பியோட்டம்

காலி பொலிஸ் நிலைய அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் இன்று அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

காலி போபே வட்டரகபர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், காலி கொங்கஹா வீதி மைனாகொடவைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவருமே தப்பிச் சென்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles