Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உலகம்ஆப்கானில் கண்ணிவெடியுடன் விளையாடிய 9 சிறுவர்கள் மரணம்

ஆப்கானில் கண்ணிவெடியுடன் விளையாடிய 9 சிறுவர்கள் மரணம்

ஆப்கானிஸ்தானில் பழைய கண்ணிவெடியுடன் விளையாடிக் கொண்டிருந்த 9 சிறுவா்கள், அந்த கண்ணிவெடி வெடித்ததில் உயிரிழந்தனா்.

ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணம், கெரோ மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கஜினி மாகாணத்துக்கான தலிபான்களின் தகவல் மற்றும் கலாசாரப் பிரிவு இயக்குநா் ஹமீதுல்லா நிஸாா் தெரிவித்தாா்.

உயிரிழந்த சிறுவா்களில் 4 போ் சிறுமிகள் எனவும், அவா்கள் 5 முதல் 10 வயதுடையவா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக போா் நடைபெற்றுவந்த ஆப்கானிஸ்தானில் பழைய கண்ணிவெடிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றால் சிறுவா்கள் அவ்வப்போது உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles