Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெருக்கடியைத் தீர்க்க பொருத்தமான தலைவர் ரணில் என்பது உறுதியாகியுள்ளது

நெருக்கடியைத் தீர்க்க பொருத்தமான தலைவர் ரணில் என்பது உறுதியாகியுள்ளது

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துவதாகவும், எனவே எதிர்காலத்தில் அவரது தலைமை நாட்டுக்குத் தேவை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வைத்து நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளலாம் என சிலர் நம்பத் தூண்டுவதாகவும் ஆனால் அது சரியானதல்ல எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.

24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும நிவாரணங்களை வழங்கிய பின்னர், அதுகுறித்து மீளாய்வு செய்யப்பட்டு அந்தப் பணிகள் உறுதிசெய்யப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles