Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவவுனியா சிறைச்சாலையிலிருந்த கைதி ஒருவர் உயிரிழப்பு

வவுனியா சிறைச்சாலையிலிருந்த கைதி ஒருவர் உயிரிழப்பு

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று (31) மரணமடைந்துள்ளார்.

குற்றச் செயல் தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் குறித்த கைதிக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜா – எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles