முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலை குறைப்பின் நன்மையை மக்களுக்கு வழங்குவதற்கு எரிபொருளின் விலையை 50-60 ரூபாவால் குறைக்க வேண்டும் என அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு விலை குறையும் பட்சத்தில் முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவால் குறைக்க முடியும் என சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.