Sunday, January 18, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார்த்திகைப் பூ சர்ச்சை: ஆசிரியர்களுக்கு 'சப்றைஸ்' கொடுத்த மாணவர்கள்

கார்த்திகைப் பூ சர்ச்சை: ஆசிரியர்களுக்கு ‘சப்றைஸ்’ கொடுத்த மாணவர்கள்

யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகைப் பூ மற்றும் இராணுவ வாகனத்தை ஒத்த அலங்காரங்கள் கடந்த சனிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேற்று விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.

விசாரணைக்காக மூன்று மாணவர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் விசாரணையில் நீங்கள் இல்ல அலங்காரம் செய்தது கார்தத்திகைப் பூவைத் தானே இதற்கான ஆலோசனைகளை ஆசிரியர்களா வழங்கினார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன் போது பதில் வழங்கிய மாணவர்கள் நீங்கள் கூறுவதைப் போல குறித்த பூ கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை காந்தள் மலர் என அறிந்துள்ளோம் எமது பாடப்புத்தகத்தில் அவ்வாறே உள்ளது.

அது மட்டுமல்லாது வருடத்தில் ஒரு முறை பூக்கும் அரிய மலர் அதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே காட்சிப்படுத்தினோம்.

அத்துடன், ஆசிரியர்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. நாங்கள் இவ்வாறு அமைக்கப் போகிறோம் என அவர்களுக்கு தெரியப்படுத்தவும் இல்லை ‘சப்றைஸ் ‘ வழங்க வேண்டும் என்பதற்காக தெரியாமல் வைத்தோம் என்றனர்.

இந்நிலையில் பாடசாலை அதிபரும் பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட நிலையில் தனது வாக்குமூலத்தில் ஏற்கனவே இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பாடசாலை ஆசிரியர்கள் கூட்டத்தில் தெளிவாக கூறினேன்.

ஏற்கனவே கிளிநொச்சியில் இடம்பெற்ற இல்ல அலங்காரம் தொடர்பில் எழுந்த சர்ச்சை குறித்தும் கூட்டத்தில் தெரிவித்தேன்.

இவ்வாறான அலங்காரம் தொடர்பில் தானும் அறிந்திருக்கவில்லை என அதிபர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles