முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுவாதிபுரத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது ஏற்பட்ட கைகலப்பில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு (31) சுவாதிபுரம் பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்குக்காக வந்திருந்த இரு உறவினர்கள் குழுக்களுக்கிடையில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது வாக்குவாதம் முற்றி அது கைகலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் காயமடைந்து முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.