Friday, April 17, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுவரெலியா நகரின் மத்தியில் தீ விபத்து

நுவரெலியா நகரின் மத்தியில் தீ விபத்து

நுவரெலியா நகர மையத்தில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றின் சமையலறை பகுதியில் இன்று (31) ஏற்பட்ட தீயினால் சமையல் பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா நகர மையத்தில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் தீ பரவியதாகவும், தீப்பரவலுக்கான காரணம் வாயு கசிவு எனவும் நுவரெலியா பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

தீ பரவிய சில நிமிடங்களில் நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், உடைமைகளுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles