Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதந்தையின் உயிருக்கு எமனான மகன்

தந்தையின் உயிருக்கு எமனான மகன்

கலவுட கொடுன்ன பகுதியில் இன்று (30) அதிகாலை தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறியதில் மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளதாக கலவுட பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபத்கமுவ, கொடுன்ன, ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மகனின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பில் மாறியதில் குறித்த நபர் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலவுட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன​ை

உயிரிழந்தவரின் சடலம் கலவுட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles