கடந்த மூன்று மாதங்களில் 16 தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை கருவிகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு சுட்டிக்காட்டுயுள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கண் சொட்டுமருந்து, நீரிழிவு மற்றும் இருமல் மருந்துகள், கெனுயுலா உள்ள பல மருத்துவ உபகரணங்கள் அதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள இரத்மலானையில் உள்ள அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்படும் நீரிழிவு மருந்தும் தரமற்றது என மருத்துவ வழங்கல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது, இந்த மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.