உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் நேற்று (28) கருத்துக்களை அறிக்கையிட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.