தெனியாய பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக மூங்கில் மரங்களை வெட்டச் சென்ற இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூங்கில் மரத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் இருவரும் மோதியுள்ளதுடன், இதன்போது அவர்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கிய இரண்டு மாணவர்களும் உடனடியாக தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு மாணவர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.