Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையக பாடசாலைகளுக்காக 2,535 ஆசிரியர் உதவியாளர்கள்

மலையக பாடசாலைகளுக்காக 2,535 ஆசிரியர் உதவியாளர்கள்

நிலையான தீர்வுகளை வழங்குவது சவாலாக இருக்கும் போது, ​​மாற்றுத் தீர்வுகள் மூலம் கல்வி முறையைத் தொடர வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களுக்குள் மலையக பாடசாலைகளுக்கு 2,535 ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மே மாதத்திற்குள் அந்த குழுவை இணைத்து அடிப்படை பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles