Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2,971 மில்லியன் ரூபா வருமானம்

தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2,971 மில்லியன் ரூபா வருமானம்

2024 பெப்ரவரி மாதம் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் மாதாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின் பிரகாரம், பெப்ரவரி மாதத்தில் 6739 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் இந்தத் தொகை ஈட்டப்பட்டுள்ளது.

2023 பெப்ரவரி மாதம் 4366 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டு 2401 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை கூறுகிறது.

கடந்த ஆண்டு கடும் வறட்சியை தொடர்ந்து பெய்த மழையால், தென்னை உற்பத்தியும் அதிகரித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles