Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உலகம்தாய்லாந்தில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி

தாய்லாந்தில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி

தாய்லாந்து ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடாக கருதப்பட்டாலும் அவர்களின் திருமணத்துக்கு அங்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், தாய்லாந்து பாராளுமன்ற கீழவை ஓரின் சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கும் திருமண சமத்துவ சட்டமூலத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.

எனினும் அது சட்டமாவதற்கு முன் செனட் மற்றும் அரச ஒப்புதலை பெற வேண்டியுள்ளது.

2024 முடிவில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

மன்னரின் ஒப்புதலுக்கு பின்னர் இது முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.

இதன் மூலம் தாய்வான், நேபாளத்தை அடுத்து ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளிக்கும் ஆசிய நாடுகளில் ஒன்றாக பதிவாகவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles